WhatsApp Image 2024 10 15 at 23.45.27 1

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உதவி தேர்தல்கள் ஆணையாளர்  எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் குறித்த  தெளிவூட்டல் செயலமர்வு இடம் பெற்றது.

WhatsApp Image 2024 10 15 at 23.45.27 1

எதிர் வரும் 2024 பாராளுமன்ற தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமையில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலகத்தில் 15.10.2024 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2024 10 14 at 21.43.14

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி 14.10.2024 அன்று பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்தார்.

WhatsApp Image 2024 10 15 at 12.29.58 1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர்  எஸ்.ஏ சசிகரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 15.10.2024 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 10 14 at 12.23.09

மாணவ தூதுவ நிகழ்ச்சித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவருபரஞ்சினி முகுந்தன் அவர்களின் தலைமையில்  உதவி மாவட்ட செயலாளர் ஜீ பிரணவன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.10.2024 அன்று இடம்பெற்றது.