WhatsApp Image 2024 10 08 at 13.20.29

மட்டக்களப்பில் சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும்  நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 08.10.2024 அன்று இடம்பெற்றது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலகமும் இணைத்து அரச உத்தியோகத்தர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு  தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

WhatsApp Image 2024 10 05 at 21.18.58 1

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு கண்ணாடி படகுச்சேவை மற்றும்  சிற்றுண்டிச்சாலை என்பன உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சின் நிதி பங்களிப்பின் கீழ் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  எ.சுதர்சன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ்  இந் நிகழ்வு செங்கணமுனை வீதி காயன்கேணியில் 05.10.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 10 04 at 22.15.16

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் காப்புறுதி மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.10.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 10 04 at 22.20.12

மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெண் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான  கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.10.2024 அன்று இடம்பெற்றது. கிரிசலிஸ்  நிறுவனத்தின் பங்களிப்புடன் சமூக நல்லிணக்கம், சமாதானம், பொருளாதாரத்தை வலுவடைய செய்வதனை நோக்காக கொண்டு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

WhatsApp Image 2024 10 04 at 22.15.16

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் காப்புறுதி மற்றும் நஷ்டஈடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.10.2024 அன்று இடம்பெற்றது.