WhatsApp Image 2024 09 25 at 08.45.25 1

மட்டக்களப்பு மண்முனை மேற்கு  வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாய குழு கூட்டம் 24.09.2024 அன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சக்தியானந்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திட்டம் மற்றும் மாகாண நீர்ப்பாசன திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கை நிலங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, பல விடயங்களுக்கான இறுதி தீர்மானங்களும் எட்டப்பட்டது.

WhatsApp Image 2024 09 21 at 10.19.16

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதியை தேர்ந்தெடுப்பதற்கான  தேர்தல் 21.09.2024 அன்று நாடளாவிய ரீதியில் காலை எழு மணி முதல் பிற்பகல் நான்கு மணி வரை இடம்பெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் 442 வாக்களிப்பு நிலையங்களில் 449686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்காளர்கள் தமது ஜனநாயக கடமையினை நிறைவேற்றுவதற்காக காலை ஏழு மணி முதல் ஆர்வத்துடன் வருகை தருவதை  அவதானிக்க முடிந்தது.

WhatsApp Image 2024 09 19 at 18.55.09

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் கடமையாற்றவுள்ள வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 19.09.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 09 20 at 14.23.41 2

நாளை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை எனவும் மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதிமீறல் சம்பவங்களே பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும்  மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக 20.09.2024 அன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல்  தெரிவித்தாட்சி அலுவலகருமான திருமதி ஜெஸ்டினா முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.

WhatsApp Image 2024 09 19 at 19.01.23

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் முப்படைகளின்  பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் 19.09.2024 அன்று இடம்பெற்றது. உதவி தேர்தல்கள் ஆணையாளர்  எம்.எ.எம்.சுபியான் அவர்களின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.