WhatsApp Image 2024 09 11 at 09.04.34 1

சர்வதேச தற்கொலை தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் அரச மற்றும் அரச சார்பற்ற பிரதி நிதிகளுடன்  வருங்காலத்தில் தற்கொலைகளை தடுப்பதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மாநாட்டு மண்டபத்தில் 10.09.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 09 09 at 14.54.15 1

சட்டவிரோத போதைப்பொருள் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்தி சம்மந்தமான முறைப்பாடுகள் மற்றும் அதன் பாதிப்பிற்கான உளவளத்துணை, சிகிச்சை, புனர்வாழ்வு தொடர்பான தகவல்களைத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனங்கள் மற்றும் தொடர்பு இலக்கங்களைக் காட்சிப்படுத்தும் பதாதைகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே. முரளிதரன் அவர்களினால் 09.09.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 08 06 at 10.08.08

ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 26.07.2024 அன்றிலிருந்து செப்டம்பர் 06 ம் திகதி வரை  மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக இதுவரை 36 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் அறிவித்துள்ளது.

WhatsApp Image 2024 09 09 at 10.24.22

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்  கண்காணிப்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களை ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் சந்தித்து விசேட  கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2024 09 06 at 09.05.29 1

மட்டக்களப்பிற்கு இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் கலாச்சார பரிமாற்றத்தையும் இன நல்லுறவை மேம்படுத்துவதற்கான விஜயம்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு  பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 05.09.2024 அன்று இடம்பெற்றது. பொது நிர்வாக அமைச்சினால் நாடளாவிய ரீதியில்  இளைஞர் யுவதிகள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்துவதற்கான  செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் சகவாழ்வு நல்லிணக்கத்தை மேம்படுத்த இவ்வாறா செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.