WhatsApp Image 2024 07 19 at 05.52.44

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாத்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.07.2024 அன்று இடம்பெற்றது. இதன்போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பண்ணைகளை மீளமைக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது  இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு துரிதமாக  பண்ணை காணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

WhatsApp Image 2024 07 18 at 22.33.55 1

இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான  சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கடந்த காலங்களில்  நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 18.07.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 07 16 at 16.24.22 1

மட்டக்களப்பில் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அரையாண்டுக்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 16.07.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 07 17 at 14.02.45

மட்டக்களப்பில் முன் பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் 2024 நிகழ்வானது மட்டக்களப்பு   மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் தலைமையில்  உதவி மாவட்ட  செயலாளர் ஜி.பிரணவன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர்   வீ.முரளிதரன் ஒழுங்கமைப்பில் மாவட்ட செயலகத்தில் 17.07.2024 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 07 16 at 16.24.19

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பொருளாதார பின்னடைவை எதிர்நோக்குகின்ற, திறமையுடைய 100,000 மாணவர்களுக்கும், க.பொ.த உயர்தர மாணவர்கள் 6,000 பேருக்கும் புலமைப்பரிசில் வழங்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நடைபெறும் மட்டக்களப்பு மாவட்ட புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் 16.07.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி லொத்தர் சபையின் அனுசரணையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.