WhatsApp Image 2024 07 04 at 15.23.40 1

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில்  பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.07.2024 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 07 04 at 14.25.24

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவில் உதித்த காணியற்ற மக்களுக்கு காணி வழங்கும் "உறுமய "  தேசிய வேலைத் திட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் குடியிருக்கும் மக்களுக்கு உறுதி வழங்குவதற்கான முன்னாயத்த நடமாடும் சேவையானது வர்த்தக, சுற்றாடல் அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் பணிப்புரைக்கமைவாக மட்டக்களப்பு மாவட்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் அவர்களின் தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில் 04.07.32024 அன்று வழங்கப்பட்டது.

WhatsApp Image 2024 07 03 at 15.36.21

அதிமேதகு  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மயிலத்தமடு,மாதவனை பிரதேசத்திற்கு களவிஜயம் ஒன்றினை 02.07.2024 அன்று மேற்கொண்டார். மட்டக்களப்பு பண்ணையாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முகமாக அரசாங்க அதிபர் தலைமையிலான குழுவினர் இக்களவிஜயத்தினை முன்னெடுத்து இருந்தனர்.

WhatsApp Image 2024 07 04 at 10.10.39

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 02.07.2024 அன்று நடைபெற்றது. ஆசிய பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUB) அமைப்பின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற இவ்விழாவில், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் அவர்கள் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் கலாநிதி. த.பிரபாகரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

WhatsApp Image 2024 06 29 at 12.39.16

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார அவர்களின் தலைமையில் "வெல்வோம் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு  29.06.2024 அன்று இந்துக்கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.