WhatsApp Image 2024 06 12 at 14.41.22

சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர்களுடனான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன்  அவர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்  அவர்களின் பங்குபற்றுதலுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் 12.06.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 06 12 at 14.39.40

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் தையல் இயந்திரங்கள் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் 12.06.2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக எஸ்கோ நிறுவன பணிப்பாளர் ஸ்பிரித்தியோன் இப்புதிய தையல் இயந்திரங்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 06 11 at 19.35.32 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் வன இலாக திணைக்களத்தினால் காணிகள் விடுவிக்கப்படவுள்ளமை  தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள மாவட்ட செயலகத்தின் நிருவாக கட்டடத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் வன வள திணைக்கள பணிப்பாளர் நாயகம் இ.ஏ.பி.என். எதிரிசிங்க அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.

WhatsApp Image 2024 06 11 at 11.35.39 1

மட்டக்களப்பு மாவட்ட செயலக புதிய கட்டத்தொகுதியில் நிர்வாக பணிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்கள் 10.06.2024 அன்று ஆரம்பித்து வைத்தார். கோட்டையில் இயங்கிய மாவட்ட செயலகத்தின் இடவசதி பற்றாக்குறையினால் 2016 ஆம் ஆண்டு புதிய மாவட்ட செயலகத்திற்கான கல் வைக்கப்பட்டு இக்கட்டத்தொகுதியின் நிர்மான பணிகள் இடம்பெற்று வருகின்றது.