- Details
- 21views

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார அவர்களின் தலைமையில் "வெல்வோம் ஶ்ரீ லங்கா" நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு 29.06.2024 அன்று இந்துக்கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்.
- Details
- 15views

இலங்கை மத்திய வங்கியின் பிராந்திய மன்ற கலந்துரையாடல் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அவர்களின் தலைமையில் பாசிக்குடாவில் 24.06.2024 அன்று இடம்பெற்றது. இலங்கை மத்திய வங்கியினால் முன்னெக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேடுப்புக்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது.
- Details
- 17views

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 23.06.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அல் அக்சா ஜும்ஆ பள்ளிவாயிலுக்கு விஜயம் செய்தார். இதன் போது அங்கு பலஸ்தீன் காசா மக்களுக்காக நடைபெற்ற பிரார்த்தனையிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.
- Details
- 25views

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத்தை அதிமேதகு ஜனாதிபதி திறந்துவைத்தார். அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
- Details
- 17views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் ரமித்த விஜேதுங்க அவர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட செயலத்தில் 13.06.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக மேற்கொள்ளப்பட்டுவரும் ஐந்தாண்டு செயற்திட்டம், சுற்றுசூழல் மற்றும் உயிர் பல்வகைமை தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உயிர் பல்வகைமையை பாதுகாத்தல் மற்றும் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மையப்படுத்தி இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.





