WhatsApp Image 2024 06 06 at 12.14.45 1

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணி வெற்றியீட்டி சாதனை படைத்துள்ளது. 48வது தேசிய விளையாட்டு விழாவிற்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியின் ஒர் அங்கமான கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கால்ப்பந்தாட்டத்திற்கான இறுதிப்போட்டி மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச அணியினருக்கும் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணியினருக்குமிடையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் கடந்த 05.06.2024  அன்று இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் களமாடிய இரண்டு அணிகளும் கோல்கள் எதுவும் போடாத நிலையில் தண்ட உதை மூலம் 5 இற்கு 4 எனும் கோல்கள் அடிப்படையில் திருகோணமலை தம்பலகாமம் பிரதேச அணியினர் வெற்றியை தமதாக்கி கொண்டனர்.

WhatsApp Image 2024 06 03 at 10.38.03

கூத்துக் கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளை அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடத்தும் குழந்தை எழுத்தாளர் ஒ கே குணநாதன் எழுதிய 57 வது நூல் " அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறு " நாவல் வெளியீடு நிகழ்வு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தமிழறிஞர் தமிழ்மணி அகலங்கன் தமையில் மட்டக்களப்பு  அமிர்தகளி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகளாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கே .மகேசன் அவர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் , வைத்திய நிபுணர் பேராசிரியர் கருணாகரன் அவர்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2024 05 30 at 22.11.20

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பாடசாலை மற்றும் சகல சாரணர் அமைப்புகளின் 2024 ஆம் வருடத்திற்கான பொதுக்கூட்டம் 30.05.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரணர் அமைப்பின் தலைவரும் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற,  இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டாலுவல்கள் அமைச்சின் அதிகாரியும்  மாவட்ட சாரணர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான சரவணமுத்து நவநீதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

WhatsApp Image 2024 05 30 at 16.17.15

இலங்கை தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கிலான சர்வ சமயக்குழுக்களின் அனுபவ பரிமாற்று விஜயம் 30.05.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை தேசிய சமாதான பேரவையின் செயற்றிட்ட முகாமையாளர் எம்.யூ.மதனி உவைஸ் தலைமையில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.

WhatsApp Image 2024 05 29 at 15.33.45

உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீளடைவு அவசர உதவி  செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு  மாவட்டத்தில் 12,224 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கள் தொடர்பான கலந்துரையாடல்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 29.05.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில்  மேலதிக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சத்தியசீலன் கலந்து கொண்டு செயற்திட்டம் தொடர்பான விளக்கங்களை உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தினார்.நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் இணைந்து  பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இவ்உதவித்திட்டம் வழங்கிவைக்கப்படவுள்ளது.