- Details
- 17views

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நீர்வள வளர்ப்புத் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- Details
- 9views

சுதேச பாரம்பரிய தமிழ் மருத்துவத்தின் உயர் கல்வி நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் ஆர். சிறி கிரிஸ்ணன் தலைமையிலான சுதேச வைத்தியர்கள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுடன் 06.05.2024 அன்று மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடினர். இதன் போது மாவட்டத்தில் சுதேச பாரம்பரிய மருத்துவத்தினை அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், மூலிகை தோட்டம் அமைத்தல் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் 04.05.2024 அன்று இடம்பெற்றது.2016, 2017 ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட அபிவிருத்தி குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் நீர் வாழ் உயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு ஆரம்ப கட்டமாக 239 எக்கர் காணியில் மீன், இறால் வளர்ப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
- Details
- 5views

பாடசாலை மாணவர்களுக்கு இரு துவிச்சக்கர வண்டிகள் மதகு ஊடகத்தினால் மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன. மதகு நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் திருமதி. ருக்சிகா மயூரனின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இடம் பெற்றது."நமது தேவை பூர்த்தியான பின்னர் நல்ல நிலையிலுள்ள பொருட்களை தேவையுடைய வேறொருவருக்குப் பகிரும்" எண்ணக்கருவிற்கமைய மதகு ஊடகத்தின் "Share to Care" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இரு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
- Details
- 7views

அரசாங்கத்தின் முன்னணி வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரிசி வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்தியமை தொடர்பாகத் தெளிவுபடுத்தும் ஊடகக் கலந்துரையாடல் 03.05.2024 அன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்கள், மேலதிக மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்டு தமது மாவட்டங்களில் இவ்வேலைத் திட்டத்தில் எவ்வளவு நிதி ஒதுக்கீட்டினால் எத்தனை குடும்பங்களை எதன் அடிப்படையில் தெரிவு செய்து அரிசி வழங்கியமை குறித்துத் தெளிவுபடுத்தினார்கள்.





