WhatsApp Image 2024 04 24 at 15.15.13

மட்டக்களப்பில் மாவட்ட மட்ட சிறுவர் கழக கிரிக்கெட் சுற்றுப்போட்டி 2024 மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன்  தலைமையில் ஈஸ்ரன் ஸ்ரார் மற்றும் எவகிறீன் விளையாட்டு மைதானத்தில்  இடம் பெற்றது. மாவட்ட சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு மதிராஜ் எற்பாட்டில் இடம் பெற்ற இப்போட்டியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேச சிறுவர் கழகங்களுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவதற்காக மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட இப்போட்டிகளுக்கான   அனுசரனை சேரி நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

WhatsApp Image 2024 04 24 at 14.56.29 2

மட்டக்களப்பு செட்டிபாளயத்தில் கண்ணகி அம்மன் விளையாட்டு மைதானத்தின் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் விழாவானது நியுற்றன் கழகத்தின் தலைவர் எஸ். வேணுகோபாலராஜ் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டு வைத்தார்.

WhatsApp Image 2024 04 21 at 15.27.30

அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக  வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாளேந்திரன்  அவர்கள் கலந்து சிறப்பித்தார். நாடு பூராகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக  ஆரம்ப விநியோகம்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில்  குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி பொதிகள்  கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலத்தில் 21.04.2024 அன்று வழங்கப்பட்டது.

WhatsApp Image 2024 04 21 at 16.49.38

களுதாவளையில் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டு கழகத்தின் தலைவர் த.சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளைாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 04 17 at 17.58.31

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் நவீன முறையிலான விவசாய செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 17.04.2024 அன்று  இடம்பெற்றது. மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தினை  நடைமுறைப்படுத்துவதற்காக மாவட்ட வர்த்தக கைத்தொழில் மற்றும் விவசாய சம்மேளத்தினால் பல  முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில்  சர்வதேச விவசாயிகள் புரட்சிகள் தினமான ஏப்ரல் 16 இல் குறித்த நிகழ்வு துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.