- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து சித்திரை வருடத்தை முன்னிட்டு நடாத்திய பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 08.04.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 16views

மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வி. வாசுதேவன் அவர்களின் தலைமையில் கொக்குவில் பொது சந்தையில் 08.04.2024 அன்று இடம் பெற்றது.இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டதுடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு ராஜ்பாபு அவர்களும் கலந்து கொண்டார்.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் முதலாம் ஆண்டுக்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி காயத்திரி ரமேஸ் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 04.04.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 20views

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகமாக பரஞ்ஜோதி பிரபாகர் அவர்கள் கடந்த முதலாம் திகதி தமது கடமையினை பொறுப்பேற்றார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இயங்கிவரும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் கிழக்கு வலய அலுவலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ள இவர் வடக்கு வலயத்தின் ஈ - திட்டத்தின் பிரதிப் பதிவாளர் நாயகமாக கடந்த மூன்று வருடங்களாக சேவையாற்றி வந்த நிலையில் கிழக்கு வலைய பிரதி பதிவாளர் நாயகமாக இவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
- Details
- 16views

மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் T20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் அங்குரார்ப்பண நிகழ்வு கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தில் 01.04.2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட மேஜர் ஜனரால் விபுலசந்திரஶ்ரீ உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.





