WhatsApp Image 2024 03 27 at 5.13.48 PM

இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் (Child Fund) அனுசரனையுடன் Action Unity Lanka தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய சமூகத்தினை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 27.03.2024 அன்று கல்லடி தனியார் விடுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 03 27 at 5.17.17 PM

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா இன்று இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய  திறப்பு விழா நிகழ்வு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட  மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும்  பின்தங்கிய பிரதேச பெண்களின் நிலைபேறான அபிவிருத்திக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக நியூசிலாந்து வெளிநாட்டு அமைச்சின் நிதி உதவியின் கீழ் ஆயித்தியமலையில் 80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலையம் மற்றும் அதனோடு இணைந்த வெதுப்பக தொகுதியும்  திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 03 24 at 11.55.54 1

ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண புற்றுநோய் பராமரிப்பு நிலையத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு "காப்போம்" அரச சார்பற்ற நிறுவனத்தின் ஆலோசகர் ஞானேந்திரன் தலைமையில் 24.03.2024 அன்று வைத்தியசாலை வளாகத்தில் அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து நோயாளர்களுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். திருகோணமலை மாவட்டத்தை  தலைமையகமாகக் கொண்ட காப்போம் அரச சார்பற்ற நிறுவனமானது "ஏழை மக்களுக்கு உதவி செய்வோம்" எனும் தொனிப்பொருளில் தமது செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது.

WhatsApp Image 2024 03 25 at 13.08.11

மட்டக்களப்பில்  "ஆணிகள் வரைந்த ஓவியம் "  எனும் தொனிப்பொருளில் பாஸ்கா  நாட்டிய நாடகம்  காந்தி பூங்கா திறந்த வெளியில் 24.03.2024 அன்று இடம் பெற்றது. புத்தசாசன  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும்  மண்முனை வடக்கு கலாசார மத்திய  நிலையம் இணைந்து நாடாத்திய  "ஆணிகள் வரைந்த ஓவியம் " பாஸ்கா நாட்டிய நாடக நிகழ்வில், பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட  ஆயர்  அதிவந்தனைக்குரிய கலாநிதி  பொன்னையா ஜோசப் ஆண்டகை கலந்து கொண்டதுடன்  கெளரவ அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.

WhatsApp Image 2024 03 23 at 05.03.33

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் 22.03.2024 அன்று விசேட இப்தார் நோன்புதிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில்  இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், இவ் இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.