- Details
- 11views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கும் மாவட்ட வர்த்தக தைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையில் மாவட்டத்தில் விவசாயத்தை நவீன முறையில் மேற்கொள்ளுதல் தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 05.03.2024 அன்று இடம்பெற்றது. விவசாய நடவடிக்கைகளின் போது எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய இலத்திரனியல் பாவனையை அறிமுகப்படுத்தி சிறந்த விளைச்சலை பெற்றுக் கொள்வதற்கு தேவையான முன்மொழிவுகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
- Details
- 21views

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி ஒழுங்கு முறைகள் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவூட்டும் பயிற்சிநெறி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 05.03.2024 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 3views

ரியல் லுக் அக்கடமியில் (Real Look Academy) கல்விகற்ற அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு நிறுவன இயக்குனர்களான கந்தசாமி பத்மாவதி, திருமதி எஞ்சாலா சிசாந் அவர்களின் தலைமையில் 02.03.2024 அன்று கல்லடி தனியார் விடுதியில் இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
- Details
- 10views

"சிறுவர்களின் ஆரோக்கியமான வாழ்வை மேம்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் அஞ்சல் ஓட்ட காணிவேல் 2024 நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவரும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான வீ.ஈஸ்பரன்அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் 03.03.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 15views

புளியந்தீவு பகுதியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு மைதானத்தினை பெற்றுக் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் 29.02.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் புளியந்தீவில் காணப்படும் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விளையாட்டு மைதானம் இன்மை பாரிய ஒரு குறையாக காணப்படுவதுடன், மிக விரைவில் அதற்கான தீர்வை காண வழிவகையினை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் இராஜாங்க அமைச்சரின் ஆலோசனைக்கு அமைவாக துறைசார் நிபுணர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.





