WhatsApp Image 2024 02 26 at 12.33.30 1

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வுமட்டக்களப்பில் 26.02.2024 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் சம்மேளனத்தின் தலைவர் ஏ.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,  மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.

WhatsApp Image 2024 02 24 at 19.29.19

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயத்தினை மேற்கொண்ட நீதி அமைச்சர் கலாநிதி.விஜயதாச ராஜபக்ஸ  அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீதித்துறை சார்ந்த பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டார்.

WhatsApp Image 2024 02 24 at 17.44.06

மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனைகள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று 24.02.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் விஜத்தினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த நீதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கள விஜங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் நிலமை தொடர்பாக அறிந்து கொண்டதுடன் மட்டுமல்லாமல், பல தரப்பட்ட துறைசார் அதிகாரிகள், மாவட்ட சமூக அமைப்புக்களையும்   சந்தித்து கலந்துரையாடி, அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் காணி பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலில் நீதிஅமைச்சர் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

WhatsApp Image 2024 02 26 at 11.13.48 1

கண்ணன்குடா மகா வித்தியாலய மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கண்ணன்குடா மகா வித்தியாலயத்தின் அதிபர் ரீ. கரிகாலன் அவர்களின் தலைமையில் கண்ணன்குடா மகா வித்தியாலய மைதானத்தில் 25.02.2024 அன்று மிகச் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்.

WhatsApp Image 2024 02 24 at 08.02.01 2

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று 23.02.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் அவர்களின் தலைமையிலான சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.