- Details
- 14views

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எஸ். புவனேந்திரன் அவர்கள் பதுளை மாவட்ட லுணுகல பிரதேச செயலாளராக பதவி உயர்வு பெற்றதையடுத்து மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இப்பிரியாவிடை நிகழ்வில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் புவனேந்திரன் அவர்களுக்கு மகத்தான பிரியாவிடை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் பதவிநிலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு புதிய பிரதேச செயலாளருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
- Details
- 21views

கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை என்பன இணைந்து நடாத்திய பிரதேச கலாசார விழாவும் ஸம் ஸம் சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் 08.02.2024 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 20views

எஸ்கோ நிறுவனத்தினால் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களை வலுவூட்டும் செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 07.02.2024 அன்று இடம் பெற்றது.
- Details
- 9views

மட்டக்களப்பில் விவசாயிகளிடம் அரசாங்கத்தினால் அனுமதியளிக்கப்படாத தராசின் மூலம் நெல் கொள்வனவில் ஈடுபட்டுவந்த வியாபாரிகளுக்கு எதிராக அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.07.02.2024 அன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோத தராசின் மூலம் மோசடியாக நெல் கொள்வனவு செய்துவந்த 8 வியாபாரிகளின் தராசுகளை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அளவீட்டு திணைக்கள அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
- Details
- 10views

சிரச, சக்தி ஊடக வலயமைப்பு ஏற்பாடு செய்துள்ள பிரவாக பிரஜா அலை செயற்றிட்டத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் 07.02.2024 அன்று முன்னெடுக்கப்பட்டது. இன்றைய செயற்றிட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மட்டக்களப்பு கல்லடி வாவியில் இருந்து பெறப்பட்ட நீரானது, சர்வ மத தலைவர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் வாகன பேரணிக்கு கையளிக்கும் நிகழ்வு காந்தி பூங்கா முன்பாக இடம்பெற்றது.





