- Details
- 18views

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்தும் முன்னாள் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தவிசாளர் பொன்.செல்வநாயகம் அவர்களின் தமிழ் - சிங்கள மொழிகளிலான "முன்பள்ளிக் கல்வி" எனும் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வானது அரசடி தேவநாயகம் மண்டபத்தில் வைத்திய நிபுணர் வ.வரணீதரன் தலைமையில் 27.01.2024 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
- Details
- 8views

ஐ டி எம் நிறுவனத்தில் டிப்ளோமா கற்கைகளை நிறைவு செய்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஐ டி எம் நிறுவனத்தின் பணிப்பாளர் ரி.சசிகுமார் தலைமையில் மட்டக்களப்பு தனியார் விடுதியில் 28.01.2024 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
- Details
- 10views

மட்டக்களப்பு நகர்பகுதி மற்றும் பிரதான, சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.01.2024 அன்று இடம் பெற்றது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுவின் 2024ஆம் ஆண்டு முதலாம் காலாண்டுக்கான கலந்துரையாடல் 26.01.2024 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே ஜே முரளீதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணிகளை பல்வேறு வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
- Details
- 5views

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அத்துடன் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த "நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி" என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.





