WhatsApp Image 2024 01 19 at 16.13.52

மண்முனை தென்மேற்கு  பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் அவர்களின் தலைமையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரன் அவர்களினால் நிவாரணப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 01 19 at 11.34.41

2023ம் ஆண்டு  விசேட வீட்டு  திட்டத்தின்  கீழ்  சமுர்த்தி ரன்விமன வீடுகள் கையளிக்கும் நிகழ்வு  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் முசமில் தலைமையில்  19.01.2024 அன்று இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே .ஜே முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை கையளித்தார்.

WhatsApp Image 2024 01 19 at 11.32.25

மட்டக்களப்பு  பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பொங்கல் விழாவானது அதன் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு. சுகுணன் அவர்களின் தலைமையில்  பிரதான மண்டபத்தில் 19.01.2024 அன்று மிக சிறப்பாக இடம் பெற்றது. தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது தமிழர் திருவிழாவாக மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே .ஜே முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் ஆணையாளர் என். சிவலிங்கம் அவர்கள் விசேட அதிதியாகவும்  கலந்து கொண்டிருந்தார்கள்.

WhatsApp Image 2024 01 17 at 13.47.51

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களுக்கு கிழக்கு மாகாண சமூக சேவைத்திணைக்களத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் 17.01.2024 அன்று கையளிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் கே. இளங்குமுதன் இவ்வுலர் உணவுப் பொதிகளை அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே. முரளிதரன் அவர்களிடம் மாவட்ட செயலகத்தில் வைத்து கையளித்தார்.