WhatsApp Image 2024 01 09 at 16.04.50

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.01.2024 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2024 01 10 at 17.35.21

மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் அவர்கள் பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்று மோர வேவ பிரதேச செயலகத்தில் 10.01.2024 அன்று கடமையை பெறுப்பேற்றுள்ள நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு 09.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 01 05 at 12.31.23 1

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் தேசிய ரீதியான பொது மக்கள் கருத்தறியும் உண்மையை கண்டறியும் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்காலச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசங்க குணவர்த்தன தலைமையிலான குழுவினர் செயலகத்தில் இடம்பெற்ற  கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் உண்மையை கண்டறியும் குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக இதன் போது விளக்கங்களை வழங்கியிருந்தனர்.

WhatsApp Image 2024 01 04 at 19.06.54

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

WhatsApp Image 2024 01 03 at 17.08.04 1

மட்டக்களப்பு புல்லுமலை மாவளையாறு கைலன் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கும் நிகழ்வு மாவளையாறு சமூக செயற்பாட்டாளர் ந.ராஜரட்ணம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில்  03.01.2024  அன்று இடம்பெற்றது.