WhatsApp Image 2023 12 18 at 10.09.19

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் அவர்கள் தனது கடமைகளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளார். குறித்த நியமனமானது கடந்த 13.12.2023 அன்று கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திரகாந்தன் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என். ரஞ்சித் அசோக ஆகியோர் முன்னிலையில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்த்தன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 12 15 at 11.24.26

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் "வீட்டுத்தோட்டம் முதல் பாடசாலை வரை " செயற்திட்ட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இச்செயல்திட்டமானது பட்டிப்பளை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று மேற்கு போன்ற பின்தங்கிய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுகின்றது. உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் கீழ்  பாடசாலை மாணவர்களின் உடல் உள ஆரோத்தியத்தை மேம்படுத்துவதற்காக சமைத்த சத்துணவு வழங்கபட்டு வருகின்றது.

WhatsApp Image 2023 12 16 at 17.06.23

மட்டக்களப்பு மாவட்ட செயலக வருட  இறுதி ஒன்று கூடலும் பிரியாவிடை வைபவமும் - 2023 மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபரும் நலன்புரிச் சங்க தலைவருமாகிய திருமதி.சுதர்சினி  ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக வளாகத்தில் 16.12.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 12 15 at 21.51.11 1

மட்டக்களப்பு  மாவட்ட செயலக  ஒளி விழா நிகழ்வானது மாவட்ட  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி  ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில் 15.12.2023 அன்று  இடம் பெற்றது. அதிதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக  அருட்தந்தையர்களான எம்.   ஸ்னிஸ்லஸ் மற்றும் பி.அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.இவ் உலகின் சாந்தி சமாதானம்  பிறக்க வேண்டும் என்பதற்காக  அவதரித்த  கிறிஸ்த்துவின் பிறப்பினை கொண்டாடும் விதமாக ஒளி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.