- Details
- 9views

பருவப் பெயர்ச்சி காலநிலை தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 12.01.2024 அன்று இடம்பெற்றது. மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பாக இதன் போது அரசாங்க அதிபரினால் அதிகாரிகளிடம் விரிவான விளக்கங்கள் கோரப்பட்டதுடன் இதுதொடர்பாக விரிவான கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தனர்.
- Details
- 5views
உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைக்கால செயலகம் (ISTRM) அண்மையில் கிழக்கு மாகாணத்தில் பொது மக்களின் கருத்தறியும் செயற்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நிலையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தெளிவு மற்றும் பரிந்துரைகளை சேகரிக்கும் நோக்கத்துடன் இந்த கருத்தறிதல் நடத்தப்படுகிறது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடைமழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் 10.01.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில், ஏறாவூர் 04 இல் அமைந்துள்ள மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்கியிருந்தவர்களை அரசாங்க அதிபர் சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டார்.
- Details
- 11views

LIFT நிறுவனத்தினால் 2024 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் செயற்படுத்தப்படவிருக்கும் புதிய வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகக் கருந்தரங்கு 10.01.2024 திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திருமதி.ஜானு முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளைஞர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதனூடாக வன்முறைத் தீவிரவாதத்தைத் தடுத்தல் எனும் இவ் வேலைத்திட்டத்தில் 900 மாணவர்களுக்கு “கருத்துச் சுதந்திரமும் சமூகப் பொறுப்புடன் கூடிய ஊடக செயற்பாடுகளும்” எனும் தலைப்பில் விழிப்புணர்வுக் கருந்தரங்குகள் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
- Details
- 11views

தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் கிழக்கு மாகாணத்திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 09.01.2024 அன்று இடம் பெற்றது.





