- Details
- 3views

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முரளிதரன் அவர்களிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். பண்ணையாளர்களின் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
- Details
- 9views

உழவர் திருநாளை சிறப்பிக்கு விசேட தைத்திருநாள் விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் 15.01.2024 அன்று இடம் பெற்றது. சங்கே முழங்கு சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் பொ.டிமலேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கொக்கட்டிச் சொலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.க.சச்சிதானந்த குருக்கள் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.
- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினர் 13.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினர் மாவட்டத்தில் பருவப்பெயர்ச்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் உள்ள முருக்கன்தீவு, பிரம்படித்தீவு, தாரவெளி, அம்பேத்குடா போன்ற பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு தேவையான சமைத்த உணவுகளை வழங்கிவருகின்றமை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் அவர்கள் 12.01.2024 அன்று சில இடைத்தங்கல் முகாம்களை பார்வையிட்டதுடன், இடைத்தங்கல் முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
- Details
- 7views

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்கள், வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே முதரளிதரன் அவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மட்டக்களப்பில் உள்ள இடைத்தங்கல் முகாம்களிற்கு 13.01.2024 அன்று விஜயம் மேற்கொண்டு சித்தாண்டி அலைமகள் வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகியவற்றில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை பார்வையிட்டுள்ளனர். இதன் போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடி இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டு முகாம்களில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்து அவற்றை உடன் தீர்த்து வைக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.





