WhatsApp Image 2024 01 25 at 13.18.21

மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் கவியரங்கானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 25.01.2024 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 01 25 at 13.18.21

மட்டக்களப்பு  தமிழ்ச்சங்கத்தின் பொங்கல் கவியரங்கானது மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் தமிழ்ச்சங்க மண்டபத்தில் 25.01.2024 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 01 24 at 11.24.15 1

ஜப்பான் சர்வதேச முகவாண்மையகம், சமூக சேவை திணைக்களம், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்களம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வழங்கும் விஷேட திட்டமொன்றை கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுத்து வரும் நிலையில்  அதன் மற்றுமொரு கட்டம் 24.01.2024 அன்று கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்றது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவாண்மையகத்தின் திட்ட பணிப்பாளர் சிமிசூ தகாசி (Shimizu Takashi) தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தார்.

WhatsApp Image 2024 01 24 at 12.04.42 2

மட்டக்களப்பில் உள்ளூர் உற்பத்தி  தொழில் நிறுவனமான  நாகா பசுமை நிலையம் மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்களினால் மட்டக்களப்பு பொது சந்தை கட்ட தொகுதியில் 24.01.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. நாகா பசுமை நிலையத்தின் ஸ்தாபகர் திருமதி கோகிலாதேவி ரஞ்சித்குமார் தலைமையில் இந் நிகழ்வுகள் இடம் பெற்றன.

WhatsApp Image 2024 01 24 at 06.58.34

ஏறாவூர் நகர பிரதேச செயலகம், கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை ஆகியன இணைந்து நடாத்தும் ஏறாவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும் "இனசமதி" சிறப்பு மலர் வெளியீடும் ஏறாவூர் நகர் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் 23.01.2024 அன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜுத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளார்.