- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்திலான இறால் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சு பொரிப்பு நிலையத்தினை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 02.02.2024 அன்று இடம் பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறால் பண்ணைகளின் நிலைப்பாடு மற்றும் புதிய பண்ணைகளை அமைத்தல் தொடர்பாக ஆராயப்பட்டது.
- Details
- 6views

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.02.2024 அன்று இடம் பெற்றது.
- Details
- 6views

உலக உணவு திட்டத்தின் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள விவசாயிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 31.01.2024 அன்று இடம்பெற்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 01.02.2024 அன்று இடம்பெற்றது. விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம் தொடர்பாகவும் பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நஸ்டஈடு வழங்கல் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024ம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்கான கால அட்டவணை தயாரிக்கப்பட்டது.
- Details
- 19views

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழாவானத்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் 30.01.2024 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது. தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.





