WhatsApp Image 2024 02 21 at 12.41.12

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய அபிவிருத்தி திட்டமிடல் நிறுவனத்தினால்  மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான தெளிவுபடுத்தல் நிகழ்வு 21.02.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

WhatsApp Image 2024 02 20 at 12.41.03 1

நாடளாவிய ரீதியில் "சக்தி மிக்க இளைஞர்களை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டத்தினை விவசாய அமைச்சும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சும் இணைந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு  தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்.குகேந்திரா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் 20.02.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 02 20 at 18.24.31 1

அருட்தந்தை ஜேம்ஸ் சுரேந்திரராஜா அவர்களினால் வழிபாடு வாழ்வாகுமா  நூல் வெளியீட்டு விழா தன்னாமுனை சூசையப்பர் ஆலயத்தில் 20.02.2024 அன்று மிகச்சிறப்பாக இடம் பெற்றது. இந் நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை விருந்தினராக  மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர்  பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்விற்கு  சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் கௌரவ விருந்தினராக தூய காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை தங்கத்துரை அன்ரனைனஸ் யூலியன் அவர்களும் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 02 20 at 12.28.28

"உலகம் வாசிப்பவருக்கே சொந்தமானது" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நகர மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 02 18 at 05.57.12

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஷேட விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண அவர்கள் மட்டு போதனா வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார். வைத்தியசாலையின் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில்   இவ்விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.