- Details
- 17views

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் யாதுமானவள் ஊக்கமளிக்கும் பேச்சு பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களினால் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இராசதுரை அரங்கில் 23.02.2024 அன்று இடம் பெற்றது. சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்கு பல்கலைக்கழகம், இலங்கை யாழ் இந்திய துணைத் துாதரகம் ஆகியன இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 24 மாதமாக யாதுமானவள் நிகழ்வு தேசிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் 70வது நிகழ்வு மட்டக்களப்பில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இளம்பிள்ளை வாதம் (போலியோ) நோயினை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு தேவையான சேவையினை றோட்டரி கழகம் மேற்கொண்டு வருகின்றது. அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்நிகழ்வு இடம் பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.
- Details
- 13views

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் செயற்றிட்டங்களை அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 22.02.2024 அன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
- Details
- 2views

வடக்கு கிழக்கு பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் ஊட்டச்சத்து குறைவான சிறார்களுக்கு உதவிடும் நோக்கிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கிலும் கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணை 22.02.2024 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட திராய்மடு பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 4views

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பு என்பன இணைந்து நடாத்திய இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பான தெளிவூட்டற் செயலமர்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.02.2024 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனனினால் இணைய வழி குற்றம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச்சட்டம் தொடர்பாக விரிவாக தெளிவூட்டப்பட்டது.
- Details
- 10views

வடக்கு கிழக்கு பொருளாதார மேம்பாட்டு நடுவத்தின் ஏற்பாட்டில் ஊட்டச்சத்து குறைவான சிறார்களுக்கு உதவிடும் நோக்கிலும் பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கிலும் கனடா மட்டக்களப்பு நட்புறவு பண்ணை 22.02.2024 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட திராய்மடு பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.





