WhatsApp Image 2024 03 23 at 05.03.33

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் 22.03.2024 அன்று விசேட இப்தார் நோன்புதிறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம் தொடங்கி 11 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் கிழக்கில்  இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், இவ் இப்தார் நிகழ்வில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் பங்குபற்றினர்.

WhatsApp Image 2024 03 22 at 06.39.20 2

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் 21.03.2024 அன்று பிரதேச செயலாளர் எந்திரி.ஜீ அருணன் அவர்களின் தலைமையில் கோறளைப்பற்று வடக்கு வாகரை கலாசார மண்டபத்தில் பிற்பகல் 02 மணிக்கு இடம்பெற்றது.

WhatsApp Image 2024 03 14 at 21.25.12

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்குப்பல்கலைக்கழகம் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 செயலகப்பிரிவுகளில் தொழில் முயற்சிற்கும், சமூக சேவைக்கும் அதிகூடிய பங்களிப்பு செய்த 14 பெண் தொழில் முயற்சியாளர்களையும், 14 பெண் சமூகசேவையாளர்களையும் கௌரவிக்கும் முகமாக 'சர்வதேச மகளிர் தினம் - 2024 ' நிகழ்வானது 13.03.2024 அன்று  கிழக்கு பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

WhatsApp Image 2024 03 14 at 23.33.26

மண்முனை மேற்கு சிறுபோக பயிர்ச்செய்கையின் ஆரம்ப கூட்டமானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானத்தி ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன்  தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 14.03.2024 அன்று இடம் பெற்றது. சிறுபோக பயிர்ச்செய்கையானது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் சுமார் 16200 ஏக்கரில் வவுணதீவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் குறித்த ஆரம்ப கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது விவசாய செயற்பாடுகளின் ஆரம்பத் திகதி, அறுவடைத் திகதி, மற்றும் விவசாய செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலுடன் தீர்வுகளும் எடுக்கப்பட்டன.

WhatsApp Image 2024 03 16 at 05.54.54

மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச மகளீர் தின விழாவும் விற்பனைக் கண்காட்சியும்  வன்னிஹோப் அனுசரனையில் "அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில்  பழுகாமம்  துரௌபதி அம்மன் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது.