- Details
- 6views

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு சிமாட் ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் நடாத்தப்படும் இலவச கணனி பயிற்சி நெறி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களினால் 01.04.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பின்னர் பல்கலைக் கழகம் மற்றும் ஏனைய கற்கைநெறிகளைத் தொடர வாய்ப்புக் கிடைக்காத மாணவர்களுக்கு கணனி அறிவினை வழங்கும் நோக்குடன் சிமாட் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களினால் இக்கணனிப்பயிற்சி வழங்கப்பட்டுவருகின்றது.
- Details
- 5views

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக திரு சுந்தரமூர்த்தி ராஜ்பாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 01.04.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டார்.
- Details
- 14views

மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாவட்ட இப்தார் நிகழ்வு, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் 27.03.2024 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது. புனித றமழான் மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பிருந்து அதனை முடிவுறுத்தும் 16வது நாள் இப்தார் நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி எம்.எச்.எம். பசீல், தொழில் நியாயாதிக்க சபை தலைவர் வீ.எம். சியான் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.
- Details
- 7views

தேவைநாடும் மகளிர் அமைப்பினரினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு தேவை நாடும் மகளிர் அமைப்பின் நிலைய முகாமையாளர் டி. சங்கீதா தலைமையில் வை எம் சி ஏ மண்டபத்தில் 28.03.2024 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜெ.ஜெ முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
- Details
- 15views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்ரினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 27.03.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் ஏற்படுகின்ற இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் ''உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்'' எனும் தொனிப்பொருளில் மாவட்ட செயலகத்தில் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம், லயன்ஸ் கழகத்தின் நிதி அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





