WhatsApp Image 2024 05 03 at 12.02.49

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் வெற்றிக்கிண்ண மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பிலுள்ள பிரதேச செயலகங்கள், அரச திணைக்களங்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டித்தொடர் ஒன்றினை மாவட்ட செயலகம் கடந்த 3 தினங்களாக நடாத்தி வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பு முதுநிலை பயிற்றுனருக்கான  கணிப்பீடுகளை இலகுபடுத்துவதற்கான தளம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட  செயலாளர் ஜி.பிரணவன் அவர்களினால் 03.05.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 04 30 at 12.11.20

தேசிய  "உருமய" காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் குறித்து கிழக்கு மாகாண மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  விதமாக கிழக்கு மாகாணத்தின் அரச அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்வு 30.04.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அரச காணிகளின் சகல உரிமைகளையும் பெற்ற மக்களுக்கு நாடளாவிய ரீதியில் 20 இலட்சம் "உருமய"  காணி உறுதி அளிப்பு வேலை திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டத்தின்  மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாகாணக் காணி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

WhatsApp Image 2024 05 01 at 10.26.35

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர். திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களும், விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு சிவராஜா, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிக்குப் பொறுப்பாக உள்ள மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்சினி, சுவாமி விபுலாநந்த அழகியற்  கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை பாரதி கென்னடி, பிரதேச செயலாளர்கள், மட்டக்களப்பு மாநகரசபை பொறியியலாளர், மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கல்வித் திணைக்கள பணிப்பாளர்கள், சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர், மட்டக்களப்பு  மாவட்ட கிரிக்கட் சங்கத்தின் செயலாளர் உட்பட பல்வேறு திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், விளையாட்டு வீர வீராங்கனைகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 04 30 at 13.47.41

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை  இலங்கைக்கான ஐக்கிய இராச்சியத்திற்கான தூதுவர் அன்றோவ் பற்றிக் (Andrew Patrik) மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையிலான  குழுவினருடனான கலந்துரையாடலில் மாவட்ட செயலகத்தில் 30.04.2024 அன்று ஈடுபட்டனர்.