WhatsApp Image 2024 05 21 at 10.23.30

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி்க் குழுத் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவ சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முதளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இக்கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.05.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 05 20 at 10.06.49

மட்டக்களப்பில் வை.எம்.சி.ஏ நிறுவனம் நடாத்தும் செவிப்புலனற்ற மாணவர்களின் பாடசாலையான வாழ்வோசை பாடசாலையின் 25 வது வருட நிறைவு விழா அதன் நிறுவனத்தின் தலைவர் வி.ஈ. தர்சன் தலைமையில் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் 19.05.2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 05 16 at 14.57.03

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம அவர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் 16.05.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 05 18 at 22.41.43

தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 32வது  ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்  தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவரும் ஸ்தாபகருமான நா.இதயராஜன்  தலைமையில் தரிசனம் பாடசாலை பிரதான மண்டபத்தில்  இடம்பெற்றது. இந் நிகழ்வின் ஆன்மிக அதிதியாக ராமகிருஸ்ண மிசன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா மஹாராஜ் கலந்து கொண்டதுடன்  பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

WhatsApp Image 2024 05 11 at 14.12.57 1

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராஜாங்க அமைச்சரும்  மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான சதாசிவம் வியாழேந்திரன்  ஆகிய இருவரது  தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.இதன்போது ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் 20இலட்சம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் உறுமய திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டது.