WhatsApp Image 2024 03 12 at 18.30.39

வாகரை  மாங்கேணி நல்லாயன் நெய்தல் கலையகத்தில் சர்வதேச மகளீர்தின நிகழ்வு நல்லாயன் நெய்தல் கலையக வளாகத்தில் 12.03.2024 அன்று இடம்பெற்றது. நல்லாயன் நெய்தல் கலையகத்தின் பணிப்பாளர் அருட் சகோதரி நிர்மலா அவர்களின் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.

WhatsApp Image 2024 03 12 at 13.48.07

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கான முதுமானி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் தலைமையில் 12.03.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 03 05 at 08.26.55

மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் வே.ஈஸ்பரன் கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார். மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடுவை பிறப்பிடமாக கொண்ட வே.ஈஸ்பரன் ஆரம்ப கல்வியை பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும், இடை நிலைக் கல்வியை அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர்  பாடசாலையிலும், உயர் கல்வியை மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும்  பயின்று அரசியல் விஞ்ஞான பட்டதாரியான இவர் பாடசாலை காலங்களில் மெய்வல்லுனர் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். தனது இளமைக் காலத்தில் முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரனாக உள்ளூர் செவணசைட் கால்பந்துப் போட்டிகளில் பிரகாசித்த இவர் தனது கால்பந்தாட்டத் திறன் காரணமாக மட்டக்களப்பின் பாடுமீன் பொழுதுபோக்குக் கழகத்தின் முன்னிலை வீரராக இணைத்துக் கொள்ளப்பட்டார்.

WhatsApp Image 2024 03 07 at 13.38.11

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் நன்னீர் வளர்ப்பை அதிகரிப்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் ஆனது இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  தவிசாளர் வி.விஜயரத்ன தலைமையிலான குழுவினருடன்  மாவட்ட செயலகத்தில்  07.03.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 03 05 at 12.08.57

இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றம் மற்றும் பொது நலவாய மன்றம் ஆகியன இணைந்து நடாத்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தும் செயலமர்வு 05.03.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. இலங்கை  அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி அசாத் முஸ்தபா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் சிரேஸ்ட உத்தியோகத்தர் எம்.பஸ்லான் அவர்களின் நெறிப்படுத்தலில் மட்டக்களப்பு கல்லடி தனியார் விடுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.