- Details
- 10views

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையின் காட்சிகளை ஓவியமாக வரையும் நிகழ்வு 28.02.2024 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை வளாகத்தில் இடம்பெற்றது.
- Details
- 9views

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணி உறுதி வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை பிரதேச செயலாளர் திரு ஜீ.அருணன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் 28.02.2024 அன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில்,வாகரையில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.
- Details
- 11views

பாசிக்குடா “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” வேலைத் திட்டம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட கடற்கரை முகாமைத்துவக் குழுவின் இரண்டாவது கலந்துரையாடல் 27.02.2024 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. பாசிக்குடாக் கடற்கரையை “புளு பிளேக் பீச் (Blue Flag Beach)” ஆகத் தரமுயர்த்தும் வேலைத் திட்டம் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வு கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது குறித்த திட்டத்தின் தேசிய இணைப்பாளர் சது விக்ரமசிங்க “புளு பிளேக் பீச்” வேலைத்திட்டம் தொடர்பான அறிமுகத்தை வழங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சின் அனுசரணையில் மேற்கொள்ளப்படவுள்ள குறித்த திட்டத்திற்காக உணவட்டுன, பெந்தோட்டை, அருகம்பே மற்றும் பாசிக்குடா ஆகிய நான்கு கடற்கரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
- Details
- 8views

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காணி உரிமங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிரான் பிரதேச செயலாளர் திரு சித்திரவேல் அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் 28.02.2024 அன்று இடம் பெற்றது.ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த உரிமை வேலைத்திட்டத்தின் கீழ் இருபதாயிரம் அளிப்பு, பூரண அளிப்பு மற்றும் காணி அனுமதிப்பத்திரங்கள் என்பன தேசிய ரீதியில் வழங்கப்பட்டு வரும் நிலையில், கிரானில் இடம்பெற்ற காணி உரிமங்கள் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
- Details
- 8views

அஸ்வெசும பயனாளிகளுக்கு பயன்தரும் பயிர்க் கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் 27.02.2024 அன்று இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பயன்தரும் பயிர்க் கன்றுகளை வழங்கி வைத்தார்.





