- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கேவின் மேற்பார்வையில் 243 படைப்பிரிவினரினால் ஒல்லாந்தர் கோட்டையை அழகுபடுத்தும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட தையல் போதனாசிரியர்களால் 15.02.2024 அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டது. இதன்போது கடந்த காலங்களில் அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி தையல் போதனாசிரியர்களால் அரசாங்க அதிபருக்கு இக் கௌரவம் வழங்கப்பட்டது.
- Details
- 12views

திருச்செந்துர் ஓம்காரநாதா முன்பள்ளி சிறார்களுக்கான கெளரவிப்பு வைபவம் எஸ்.வரதநிரோசன் தலைமையில் ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய வளாகத்தில் 13.02.2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஈழத்து திருச்செந்துர் முருகன் ஆலய பிரதம குரு சபரீச சைத்தன்னியர் கலந்து கொண்டதுடன் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் தலைமை அதிதியாக ஓய்வு நிலை பிரதம கணக்காளர் ஏ.ரவிந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர்.
- Details
- 15views

மட்டக்களப்பு பாலமீன் மடு, திராய்மடு மீனவ சங்கத்தின் தலைவர் வி.மனோகரன் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மீனவ சங்க உறுப்பினர்களின் குடும்பத்தவர்களுக்கான உலர் உணவு பொருட்களை 11.02.2024 அன்று வழங்கிவைத்தார்.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 13.02.2024 அன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.





