- Details
- 20views

மனித நேய அமைப்பின் நிதி உதவியில் மட்டக்களப்பு முதியோர் இல்ல ஏழைகளின் சிறிய சகோதரிகள் சபை மற்றும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகியோருக்கும் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு முதியோர் இல்ல எழைகளின் சிறிய சகோதரிகள் சபை அருட் சகோதரிகள் மற்றும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகியோர் மட்டக்களப்பு பெம்டோ அமைப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் மனித நேய அமைப்பின் நிதி உதவியின் ஊடாக மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலைக்கு மருத்துவ உபகரணங்களும், முதியோர் இல்ல எழைகளின் சிறிய சகோதரிகள் சபை அருட் சகோதரிகுழுக்கும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் நிறுவனத்திற்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் விசேட தேவையுடையவருக்கான சக்கர நாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன.
- Details
- 14views

புகலிடம் நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் விசேட தேவைக்குட்பட்ட சிறார்களுக்கான உட்படுத்தல் கல்வி திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்ச்சி திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.02.2024 அன்று இடம் பெற்றது.
- Details
- 12views

இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் வருகையுடன் ஆரம்பமான நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
- Details
- 7views

ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையின் "உண்மையை தேடி (சத்யக்சணய) " என்ற நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ஒளிபரப்பு நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் பலாச்சோலை கிராமத்தில் 06.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.
- Details
- 10views

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76வது தேசிய சுதந்திர தின வைபவம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வளாகத்தில் 04.02.2024 அன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இவ்வைபவம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.





