WhatsApp Image 2024 02 03 at 14.25.44

உலக உணவு திட்டத்தின் மூலம் ஐம்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள்  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவின் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வர்த்தக இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில்  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட  17 ஆரம்ப பாடசாலைக்கான   உணவு வழங்குனர்களுக்கான உபகரணங்கள் மண்முனை  தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் வைத்து 03.02.2024 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2024 02 03 at 14.30.26

உலக உணவு திட்டத்தின் வீட்டுத்தோட்ட முறைமையின் ஊடாக பாடசாலை  மாணவர்களுக்கு போசாக்கான உணவினை வழங்கும்  நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் தலைமையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  16 ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு உலக உணவு திட்டத்தின் அனுசரணையில் உணவு வழங்குனர்களுக்கான உபகரணங்கள் ஏறாவூர்பற்று  பிரதேச செயலக வளாகத்தில் வைத்து 03.02.2024 அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2024 02 03 at 14.23.29

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களினால் புதிய வீதிகள் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கா.சித்திரவேல் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

WhatsApp Image 2024 02 03 at 14.35.35

அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 19 நாள் இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நிகழ்வு புனித திரேசா பாடசாலையின் பிரதான மண்டபத்தில் 03.02.2024 அன்று இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் பஸ்மிலா ரவிராஜ், கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பாளர் செல்வி.கல்யாணி, மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி வடிவேல் ஜீவானந்தன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

WhatsApp Image 2024 02 02 at 16.30.02

மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விவசாயத்துறை நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் 02.02.2024 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வு, மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமானது.