WhatsApp Image 2024 01 22 at 14.54.07

2024ம் வருடத்திற்கான விதாதா வள நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 22.01.2024 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2024 01 22 at 12.31.46 1

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்குட்பட்ட விபுலானந்தா பொது நூலகத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்கள் பெறுமதியான நூல்களை வழங்கி வைத்தார். சித்தாண்டியில் அமைந்துள்ள விபுலானந்தா பொது நூலகத்திற்கு தேசிய மொழிகள் பிரிவின் நிதி ஒதுக்கிட்டின் கீழ் ஒரு இலட்சம் பெறுமதியான நூல்கள் மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

WhatsApp Image 2024 01 22 at 17.41.36

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் அவர்கள் தலைமையில் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அதிகாரிகள் 22.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில்  கலந்துரையாடல் மேற்கொண்டனர். இதன் போது மாவட்டத்தில் பருவபெயர்சி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நஸ்டஈடு வழங்கல் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2024 01 22 at 12.19.14

தகவல் தொழில்நுட்பத் துறையில் கோடிங் மூலம் வெப் தளங்களை உருவாக்கும் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுக் கொண்ட ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை மாணவர்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜே.ஜே. முரளிதரன் அவர்கள் பாராட்டி கௌரவமளித்த நிகழ்வு 22.01.2024 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 01 21 at 21.45.46

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடலானது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாமாங்கராஜா தலைமையில் ஈஸ்ட்லகூன் தனியார் விடுதியில் 21.01.2024 அன்று இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக மாவட்ட சிவில் சமூக அமைப்பின் போசகரும் மட்டக்களப்பு மறை மாவட்டம் ஆயருமான ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் ஆகிய இருவரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.