WhatsApp Image 2024 01 21 at 18.53.36 1

தேசிய நிர்மாண சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தேசமானி ரஞ்சித மூர்த்தி அவர்கள் தலைமையில் அஞ்சனா மண்டபத்தில் 20.01.2024 அன்று இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் மற்றும் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களும் விசேட அதிதிகளாக  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் அவர்களும் மற்றும் இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் எம்.டரின்டன் போல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2024 01 21 at 18.37.56

மட்டக்களப்பு காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தினால் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் அவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி முஸ்லிம் பெண்கள் காப்பகத்தின் தலைவி சல்மா ஹம்சா தலைமையில் நடைபெற்ற நிகழ்வு காப்பகத்தின் பிரதான மண்டபத்தில் 21.01.2024 அன்று நடைபெற்றது.

WhatsApp Image 2024 01 20 at 20.59.18 1

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா 2001.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச உத்தியோத்தர்களுக்கான 150 மணித்தியாலங்களை கொண்ட 19 நாள்  இரண்டாம் மொழி சிங்கள கற்றைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2024 01 21 at 06.52.04 1

இலங்கையில்  உள்ள தமிழ் கலைஞர்களுக்கு மகுடம் சூட்டும் விழாவானது வேல்ஸ் நடன ஸ்ருடியோ ஸ்தாபகர் எஸ்.கிருஸ்ணா தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் 20.01.2024 அன்று மிகப்பிரமாண்டமாக இடம் பெற்றது.

WhatsApp Image 2024 01 19 at 16.25.10

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேசத்தில் சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால்  வட்டியில்லா கடன் 19.01.2024 அன்று பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. பிரதேச செயலாளர் எஸ் எச். முசமில் தலைமையில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ எம். நஜிம் ஒழுங்கமைப்பில்  10 பயனாளிகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கம் நிகழ்வு இடம் பெற்றது.