WhatsApp Image 2024 01 03 at 13.55.18

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை புனரமைப்பு செய்யப்படாமல் மக்கள் பாவனைக்கு  உதவாத வகையில் காணப்படும் வீதிகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட  கலந்துரையாடல் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் எற்பாட்டில்உயர் மட்ட அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் 03.01.2024 அன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.

WhatsApp Image 2024 01 02 at 14.13.39

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்கள் 02.01.2024 அன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

WhatsApp Image 2023 12 29 at 17.41.21

கடந்த 21 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் 21 ஆண்டு நிறைவு நிகழ்வும், சுய உற்பத்தி பொருளின் அறிமுக நிகழ்வும் 29.12.2023 அன்று  மட்டக்களப்பில் இடம்பெற்றது. காவியா சுய அபிவிருத்தி பெண்கள் நிறுவனத்தின் பணிப்பாளர் யோகமலர் அஜித்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜி.ஜி.முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டார்.

WhatsApp Image 2024 01 01 at 09.44.11

மலர்ந்துள்ள 2024 ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் தலைமையில் 01.01.2024 ம் திகதி இடம்பெற்றது. 2024 ஆம்  ஆண்டுக்கான  பணிகளை ஆரம்பிக்கும்  முதல் நாள் வைபவம் ''வலுவான எதிர்காலத்திற்கான தொடக்கவுரை'' எனும்  தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 

WhatsApp Image 2023 12 29 at 16.33.44 1

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளும் மக்கள் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வேலைத்திட்டம் தொடர்பான செயலமர்வு 29.12.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.