WhatsApp Image 2023 12 27 at 12.33.12

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பதவி நிலை அதிகாரிகளுக்கு  "நிலைபேறான அபிவிருத்திக்கான  நோக்கங்கள்" (Sustainable Development Goals ) தொடர்பான பயிற்சி நெறி நடாத்தப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்  திருமதி ஜே.ஜே. முரளீதரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.12.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 12 26 at 09.53.18

தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 26.12.2023 அன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளீதரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 12 21 at 16.37.41

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதேச மட்டங்களில் இடம்பெறும் அரச அபிவிருத்தி செயற்பாடுகளை ஊடக மயப்படுத்த மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைவாக பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெறுகின்ற அரச நிகழ்வுகள், அபிவிருத்தி செயற்பாடுகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் தொடர்பான செய்திகளை மாவட்ட ஊடகப் பிரிவிற்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் மாவட்ட தகவல் அதிகாரி வடிவேல் ஜீவானந்தனின் தலைமையில் 21.12.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 12 22 at 10.30.11

தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் 142 வருட நிறைவினை முன்னிட்டு 23.12.2023 அன்று மட்டக்களப்பில் தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வழிகாட்டலில் பாதுகாப்பு அமைச்சின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக  தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் சிறப்பம்சங்களை வெளியுலகிற்கு வெளிப்படுத்தும் வண்ணம் தேசிய ரீதியில் இன்றைய தினம் கடெற் வோக் இடம்பெற்று வரும் நிலையில் மட்டக்களப்பில் 38 வது தேசிய மாணவர் சிப்பாய் படையணியின் கடெற் வோக் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

WhatsApp Image 2023 12 17 at 12.06.53

மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் தொடர்பாக தகவல் வழங்குபவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாரின் தொலைபேசிக்கு காட்டாத 0718598840 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக போதை வியாபாரிகளது தகவலை வழங்குமாறு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் 16.12.2023 அன்று புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.