- Details
- 11views

மட்டக்களப்பு மாவட்டத்தில் "பெடிகலோ ஹேண்ட்லூம்" என்ற உற்பத்தி நாமத்துடன் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் 21.11.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுவதற்கு அவசியமான விடயங்களை உள்வாங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
- Details
- 10views

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கிகளை கணனி மயமாக்கல் ஊடாக கணக்கு நடவடிக்கையை நடாத்தி செல்லுதல் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் செயல்பாட்டை துரிதப்படுத்துவதற்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் அவர்களின் தலைமையில் 10.11.2023 அன்று நடைபெற்றது.
- Details
- 16views

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் 1 வகுப்புடைய அலுவலகர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டலில் இருந்து விடுவிப்பதற்கான பாடநெறிப் பயிற்சி செயலமர்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் 06.11.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Details
- 39views

மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான மனித உரிமை அணுகுமுறை தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த கெட்டியாராச்சி அவர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 09.11.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 13views

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் 03.11.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





