WhatsApp Image 2023 10 18 at 09.33.26

வருடாந்தம் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒக்டோபர் 17ஆம்  திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்தின்  கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால்  சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  ஏற்பாடு செய்யப்பட்ட  விசேட நிகழ்வு நேற்று  17.10.2023 அன்று  இடம்பெற்றது.

WhatsApp Image 2023 10 15 at 12.18.41 1

நவராத்திரியின் முதல் நாள் கொலு வைத்தல் பூசை நிகழ்வுகள் 15.10.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெகதீஸ்வர குருக்கள் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. சித்தி விநாயகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து, கொலு வைக்கப்பட்டு மூலமூர்த்திக்கும், நவராத்திரி கும்பத்திற்கும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று, சகல கலா வள்ளி பாமாலை பாடப்பட்டதனைத் தொடர்ந்து, அடியார்களுக்கு பிரசாதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

WhatsApp Image 2023 10 15 at 19.12.30

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தூர்ந்து போயுள்ள குளங்களை நீர்ப்பாசனம் செய்யக் கூடிய வகையில் புனரமைப்புச் செய்து அவற்றை பிரதேச விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுகள் 12.10.2023 அன்று இடம்பெற்றன. “எங்களது செயற்பாடு எங்களது எதிர்காலம் - பெண்களையும் விவசாயிகளையும் வலுப்படுத்துவோம்.” எனும் தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டத்திற்கு அமைவாக வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கனைக்குளம், மாணிக்கம் குளம், பனிச்சங்கேணிக் குளம் ஆகிய மூன்று குளங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

WhatsApp Image 2023 10 13 at 17.55.03

மாவட்டத்தில் திறன்மிகு ஊழியர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஆர்.பி.எல்.(RPL) முறையில் என்.வி.கியு (NVQ) சான்றிதழ் பெற்றுக்கொடுப்பதற்கான விழிப்புணர்வு  செயலமர்வு  மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களது வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 13.10.2023 அன்று பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார் தலைமையில்  மனிதவலு திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் நெறிப்படுத்தலின் கீழ்  நடை பெற்றது.

WhatsApp Image 2023 10 11 at 17.44.49

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2023/2024  ஆண்டின் பெரும் போக விவசாய செய்கைக்கு தேவையான யூரியா, ரி.எஸ்.பி, எம்.ஒ.பி  போன்ற உள்ளீடுகளை விவசாயிகளுக்கு தடையின்றி பெற்றுக் கொள்வதற்கு உரக்கம்பனிகளுக்கிடையிலான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 11.10.2023 அன்று இடம் பெற்றது.