WhatsApp Image 2023 11 02 at 12.24.04

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடல்   மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 02.10.2023 அன்று இடம் பெற்றது. மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. இதன் போது மாவட்டத்தில் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சாத்தியமான பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதால் அவற்றை அழிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் பல முன்வைக்கப்பட்டன.

WhatsApp Image 2023 10 27 at 12.08.53

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சர் சிவ சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டத்தினை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 26.10.2023 அன்று இடம் பெற்றது. இந் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவிர கலந்துகொண்டார். "மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்" எனும் தொணிப்பொருளில் மாவட்டத்தில் பல வீதிகள் புணரமைக்கப்பட்டு வருகின்றது. இதன் போது பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீதிகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு அளிக்கை செய்தார்.

WhatsApp Image 2023 10 25 at 16.04.23

சர்வதேச உளவள தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு உளநலம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்வு 25.10.2023 அன்று செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஒக்டோபர் 10ஆம் திகதி சர்வதேச உளவள தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில்  நடைபெற்றது.

WhatsApp Image 2023 10 26 at 12.52.37 1

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது. அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.