WhatsApp Image 2023 10 24 at 12.32.50

காத்தான்குடி பிரதேசத்தில் சமுர்த்தி ரன்விமன வீடமைப்பு மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன ஸக்காத் நிதிய பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்ட  வீடு கையளிக்கு நிகழ்வு 23.10.2023 அன்று இடம்பெற்றது.

WhatsApp Image 2023 10 23 at 14.37.54

மட்டக்களப்பு மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் நடாத்தும்  வாணி விழா நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களது தலைமையில் 23.10.2023 அன்று மாவட்ட  செயலகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.

WhatsApp Image 2023 10 21 at 11.41.22

மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட நடமாடும் சேவை 21.10.2023 அன்று மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 10 22 at 14.03.21

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனையில் ஜனசபை தலைவர்  கருஜயசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியாக தேசிய ஜனசபை செயலகத்தின் ஏற்பாட்டில், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னோடி வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. அந்த வகையில் மாவட்டத்தின் முதலாவது தேசிய ஜனசபை நிகழ்ச்சித்திட்டம்  வவுணதீவு  கிராம சேவகர் பிரிவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

WhatsApp Image 2023 10 20 at 16.31.17

பாக்கு நீரினையினை நீந்திக் கடக்கவிருக்கும் மட்டக்களப்பு புனித மிக்கல் கல்லூரி சாரணிய மாணவர்கள் மூவரின் முயற்சியினைப் பாராட்டி ஊக்குவிப்பு அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் வேண்டுகோளின் பேரில் பெரேரா பிலான்மேட்  சேதன உரக்கம்பனியின் அனுசரணையில் இந்த ஊக்குவிப்பு தொகை 20.10.2023 அன்று  மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.