WhatsApp Image 2023 09 21 at 16.13.59

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், சுவாமி  விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவனமும்  இணைந்து  நடாத்தும் கிழக்கின் ஓவியத்திருவிழா 2023 ஆனது 21.09.2023 அன்று  சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2023 09 21 at 19.29.09

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில்   மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 20.09.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 09 19 at 15.02.20

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளின் மாணவர்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு வழங்கும் செயலமர்வு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் நடாத்தப்பட்டது.ஜனாதிபதி செயலகத்தின் வட கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன்  தலைமையில் வின்சன்ற் உயர் தர மகளிர் தேசிய பாடசாலை மண்டபத்தில் 19.09.2023 அன்று இடம் பெற்றது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முதல் தடவையாக சிவில் விமான போக்குவரத்து துறையில் இளைஞர் யுவதிகளை உள்வாங்குவதற்கான செயற்திட்டமாக இத்திட்டம் அமைந்திருந்தது.

WhatsApp Image 2023 09 20 at 11.18.53

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய இலக்கிய விழா  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்  உதவி மாவட்ட செயலாளர் ஆ. நவேஸ்வரன் தலைமையில்  மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் 20.09.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 09 19 at 11.12.06

சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கடற்கரை கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.