- Details
- 11views

மட்டக்களப்பு திருப்பெரும்துறை வீதி அபிவிருத்தி அதிகாரசபை வளாகத்தில் கனரக வாகனம் இயக்குவதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இணைப்பு படிவம் அமைச்சரினால் வழங்கி வைப்பு.
- Details
- 7views

வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது பார்வையற்றோருக்கான வீதி சமிஞ்சை விளக்கு மட்டக்களப்பில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடகத் துறை அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களினால் 31.08.2023 அன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. கிராமிய கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் கௌரவ சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நொச்சிமுனை பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சை விளக்கினை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
- Details
- 12views

மட்டக்களப்பு மாவட்டத்தில் கனரக வாகனம் இயக்குவதற்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 28.08.2023 அன்று இடம் பெற்றது.
- Details
- 3views

களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதியானது கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீடு மற்றும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் திட்டத்தின் ஊடாக வீதி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 375m நீளமான களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் கோயில் வீதிக்கான காப்பெட் இடும் வேலைத்திட்டம் கடந்த மே மாதம் 14ம் திகதி 2023 ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டதுடன் 31.08.2023 அன்று சம்பிரதாய பூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- Details
- 9views

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி எதுவும் கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநிலை மாற்றமின்றி தொடர்ந்து நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8892 குடும்பங்களைச் சேர்ந்த 29508 நபர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.





