WhatsApp Image 2023 09 06 at 12.12.43

மட்டக்களப்பு மாவட்டத்தின்   14 பிரதேச செயலகங்களில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான  தற்கொலைகளை தடுப்பதற்கான விடயங்களை எவ்வாறு கையாள்வது தொடர்பான கருத்தரங்கு மாவட்ட செயகத்தில் 04.09.2023 அன்று இடம்பெற்றது. மாவட்ட செயலக பிரதி கணக்காளர் எம்.ஏ பஷீர் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில், நாட்டில் தற்கொலைகள்  அதிகரித்துள்ள நிலையில் அதனைத் தடுப்பதற்கான ஆலோசனை வழங்குவது தொடர்பிலும் எம்மால் உதவ முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

WhatsApp Image 2023 09 04 at 15.49.04

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கொள்ளுப்பேரனும் பிரபல தென்னிந்திய பாடகரும் இசையமைப்பாளரும் பொறியியலாளருமான  ராஜ்குமார் பாரதிக்கு  மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால்  04.09.2023 அன்று கௌரவம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மகாகவியின் பேரன், பாரதி கண்ட  புதுமைப் பெண்ணை இங்கு காண்பதாகவும், இவ்விடத்தை பாரதி  பார்த்தால் தான் கண்ட இப்புதுமைப் பெண்களை பார்த்து மகிழ்ந்திருப்பார் என்றும்   தெரிவித்தார்.

WhatsApp Image 2023 09 02 at 22.58.55

மட்டக்களப்பு கல்லடியிலிருந்து கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வெளிவந்து சாதனை படைத்துக் கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீடும், 50 கலைஞர் கௌரவிப்பும்  02.09.2023 அன்று மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் இடம்பெற்றது. "தென்றல்" சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

WhatsApp Image 2023 09 04 at 11.02.27

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களுக்கு முன்வைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி செயலகத்தின் சமூக அலுவல்கள் விவகாரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் இக்காணிகள் குறித்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

WhatsApp Image 2023 09 01 at 16.16.28

மட்டக்களப்பு  திருப்பெரும்துறை  வீதி அபிவிருத்தி அதிகாரசபை வளாகத்தில் கனரக வாகனம்  இயக்குவதற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான  இணைப்பு படிவம்  அமைச்சரினால் வழங்கி வைப்பு. கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவநேசதுரை  சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கு  வருகை தந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ஊடக அமைச்சர் கலாநிதி கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களினால் இணைப்பு படிவம்  வழங்கி வைக்கப்பட்டது.