- Details
- 19views

ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் முதன்மை செயலாளருக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று 09.08.2023 அன்று இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில் ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் முதன்மை செயலாளர் ஹென்றி மற்றும் ஐக்கிய இராட்சிய தூதுவர் அலுவலகத்தின் பிரதி நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் மிஷ்லி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
- Details
- 21views

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான, கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான, பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு தொடர்பான விசேட கலந்துரையாடல் 04.08.2023 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
- Details
- 7views

மட்டக்களப்பின் பிரதான வளங்களில் ஒன்றான வாவியினை தூர்வாரி ஆழப்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்பு வாவி முகாமைத்துவ விசேட செயலணியினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் முன்னோடித்திட்டம் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வாவி முகாமைத்துவ செயலணியின் இரண்டாவது விசேட கலந்துரையாடல் செயலனியின் தலைவரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் தலைமையில் 27.07.2023 அன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தின் பிராதன வளங்களுள் ஒன்றான மட்டக்களப்பு வாவியினை ஆழப்படுத்தி பராமரித்து பாதுகாப்பதற்கு முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
- Details
- 14views

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இராணுவத்தின் 231ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் திலுப்ப பண்டாரவிற்கு அவரது சேவைகளைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 03.08.2023 அன்று இடம் பெற்றது.