- Details
- 12views

மட்டக்களப்பில் கால்களை இழந்த விசேட தேவையுடைய விவசாயிகளுக்கு 1.8 மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்கள் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் 28.06.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டது.
- Details
- 7views

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் ஆனி மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் 27.06.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
- Details
- 10views

சர்வதேச போதைப்பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழிப்புணர்வு நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் திரு ஏ. நவேஸ்வரன் அவர்களின் தலைமையில் 26.06.2023 அன்று மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்பாக ஆரம்பமானது.
- Details
- 15views

மகாவலி அதிகார சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேச்சற்தரை போன்ற பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாநிதி பத்மராஜா அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் தலைமையில், வர்த்தக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கருணாகரம் ஆகியோரது பங்களிப்புடன் இடம்பெற்றது.
- Details
- 15views

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் 22.06.2023 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.





