WhatsApp Image 2023 05 23 at 04.58.14

மட்டக்களப்பு மாவட்டதில் பால் மற்றும் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைப்பதற்கான மாவட்ட வலையமைப்புக் கூட்டம் மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங் அதிபர்  திருமதி. சுதர்சினி  ஶ்ரீகாந்த் அவர்களின்  தலைமையில்   மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 23.05.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 05 02 at 13.38.45

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை பொலிஸ், இலங்கை இராணுவம், மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து  நடாத்திய சித்திரை வசந்தம் - 2023 ஞாயிற்றுக்கிழமை 30.04.2023 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.

WhatsApp Image 2023 04 10 at 21.08.51 1

கிழக்கு மாகாண சுற்றாடல் சார்ந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பை ஸ்தாபிப்பற்தான கலந்துரையாடல் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் மாவட்ட செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின்  எற்பாட்டில் 10.04.2023 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில் இடம்பெற்றது.

IMG 20230425 WA0051

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய   தூதுவர் எரிக்  வால்ஷ்  மற்றும் அவரது அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்ததுடன்   மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி காலமதி பத்மராஜா   அவர்களின் தலைமையிலான  குழுவினருடனான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் 25.04.2023 அன்று இடம்பெற்றது.

IMG 20230331 WA0033

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர் வருகின்ற தமிழ் சித்திரைப்புத்தாண்டை  முன்னிட்டு சித்திரைப்புத்தாண்டு பாரம்பரிய கலாசார விளையாட்டு விழா நடத்துவதற்கான விசேட கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில்  மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் மற்றும்  மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன்  ஆகிய இருவரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.