WhatsApp Image 2023 03 28 at 22.14.07 1

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் முதலாவது காலாண்டிற்கான சிறுவர்கள் நலன் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடல் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று 28.03.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 03 28 at 06.15.58

மட்டக்களப்பு  மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில்  350 ஏக்கர் நிலப்பரப்பில் மகாவலி திட்டத்தின் ஊடாக இடம்பெறவுள்ள சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்படவுள்ள காணி  தொடர்பாக ஆராயும் விசேட  கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களின் தலைமையில் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 27.03.2023 அன்று இடம் பெற்றது.

WhatsApp Image 2023 03 06 at 04.06.55

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் "125 வது ஆண்டு" ஓராண்டு தொடர் விழாவின் நிறைவு நாள் நிகழ்வு 06.03.2023 ம் திகதி மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கான ராமகிருஷ்ண மிஷன் கிளைத் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ் தலைமையில் இடம்பெற்றது.

DSC 0148 resizedஅரசாங்கத்தின் தேசிய திட்டத்தினை முதலில் அமுல்படுத்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் திகழ்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

WhatsApp Image 2023 02 28 at 00.46.05

விருந்தோம்பல் துறையில் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் 28.02.2023 அன்று இடம் பெற்றது. தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை  நடத்திய 20 நாள் பயிற்சி பட்டறையை  பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.